கோவையில் அதிக ஒலி எழுப்பிய பேருந்துகள் - அபராதம் விதித்த போக்குவரத்துதுறை

அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் உபயோகித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை போக்குவரத்து காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவையில் அதிக ஒலி எழுப்பிய தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் மற்றும் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்

சிவகுருநாதன் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்திய 22 பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த ஹாரன்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் வாகன ஓட்டிகள் ஏர் ஹாரன் உபயோகிக்காமல் எலக்ட்ரிக்கல் ஹார்ன் உபயோகிக்க வேண்டும் எனவும் எலக்ட்ரிக்கல் ஹாரன் உபயோகப்படுத்துவதினால் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படாது எனவும் தெரிவித்த அதிகாரிகள் இதுபோன்று அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் உபயோகித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டுநர்களை எச்சரித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...