உடுமலை வட்டாரப் போக்குவரத்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் ஆய்வு

உடுமலையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் வைத்திருந்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து நிலையங்களில் உள்ள பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிக சத்தம் தரக்கூடிய ஏர்ஹாரன் மற்றும் அலங்கார விளக்குகள் குறித்த சிறப்பு சோதனை 30 பஸ்களில் செய்யப்பட்டது.

இதில் 10 பஸ்களில் ஏர்ஹாரன் குறைபாடு கண்டறியப்பட்டு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூபாய் 27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து செய்யப்படும் என்று உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...