ஆணைமுடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.


கோவை: ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர், ஜன்னல் கதவுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் பத்து நாளாக முகமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள் இரண்டு தினங்களுக்கு முன்பு முக்கோட்டமுடி, எஸ்டேட் பகுதியில் ஆள் இல்லாத கைவிடப்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.



இந்நிலையில் நேற்று இரவு ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளை விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...