நீண்ட நாட்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சரவணம்பட்டி பகுதி குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்ற குற்றவாளி தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக அவர் கூறினார்.


கோவை: திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாக குற்றவாளி சண்முகம் தெரிவித்தார்.

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் விக்கு என்கிற சண்முகம். இவர் மீது பத்திற்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ளன. இவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் இவரது சகோதரர் சிவா என்கிற சிவனேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற சிவனேசர் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் சண்முகம் இன்று தனது வழக்கறிஞர்களுடன் வந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.



அப்போது பேட்டியளித்த அவர் போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் கூறினார். குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாக தெரிவித்தார். 15 வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் தெரிவித்தார். மேலும் சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது என கூறிய அவர், திருந்தி வாழ்ந்து வரும் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வழகறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் தெரிவித்தார்.

தான் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு ஆஜராக தயாராக இருந்ததாகவும், ஆனால் எதிர் தரப்பினர் தன்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் கூறினார். இவ்வாறான சூழலில் காவல்துறையினர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் கடந்த வாரத்தில் தனது அண்ணனை பிடித்து காலை உடைத்து அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னையும் காவல்துறையினர் சுட்டு விடுவார்கள் என்பதால் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும், தன் குடும்பத்தினருக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...