விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து பெதப்பம்பட்டியில் கி.வீரமணி பிரச்சாரம்

மனுதர்ம யோஜனாவா என்று தலைப்பில் மத்திய அரசு கொண்டுவர உள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் நடத்தி வருகிறார் .


திருப்பூர்: படிக்க வேண்டாம் குலத்தொழிலை செய்யுங்கள் என மோடி அரசு கூறுகிறது. படித்து கலெக்டர், மருத்துவர், வழக்கறிஞர் என முன்னேற வேண்டும் என பேனாவை கையில் கொடுத்தது திராவிட இயக்கம் என கி. வீரமணி பேசியுள்ளார்.

குலக்கல்வி திட்டத்தை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டமா இல்லை. மனுதர்ம யோஜனாவா என்று தலைப்பில் மத்திய அரசு கொண்டுவர உள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் நடத்தி வருகிறார்.



இந்தத் திட்டத்தினால் எதிர்காலத்தில் இளைஞர்கள் சந்திக்கப் போகும் இன்னல்கள் குறித்து பேசி வருகிறார். இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டியில் அவரது பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய வீரமணி 1921 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது திராவிடர் இயக்கம் தான். பெண்களையும் இளைஞர்களையும் படி, படி எனது திராவிடம் கூறுகிறது.

ஆனால் படிக்க வேண்டாம் குலத்தொழிலை செய்யுங்கள் என மோடி அரசு கூறுகிறது. படித்து கலெக்டர், மருத்துவர், வழக்கறிஞர் என முன்னேற வேண்டும் என பேனாவை கையில் கொடுத்தது திராவிட இயக்கம். களிமண்ணையும் சவரக்கத்தியும் கையில் கொடுத்து குலத்தொழிலை செய்ய சொல்கிறது பாஜக அரசு என்று விமர்சித்தார்.

நாம் மக்களை படித்து பல துறைகளில் முன்னேற செய்யாமல் அவர்களை குலதொழில் செய்ய வைப்பது ஏற்புடையது அல்ல அந்த காலத்தில் ராஜாஜி முதலமைச்சராக இருந்த பொழுது இந்த குலத் தொழிலை கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அதனை திராவிட இயக்கமும், காமராஜரும் முறியடித்தனர். குலத் தொழிலில் ஈடுபடுபவர்கள் படித்து முன்னேற வேண்டுமா அல்லது அதே தொழிலை செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.



இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட திராவிடர் கழகம் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...