வால்பாறை கிருஸ்துவ ஆலயங்களில் கல்லறை திருநாள் அனுசரிப்பு - திருப்பலியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது


கோவை: நாடு முழுவதும் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் இன்று கல்லறை திரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர்களது குடும்பத்தில் இறந்து போன உற்றார் உறவினர்களை நினைக்கும் விதமாக இன்றைய தினம் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.



கோவை மாவட்டம் வால்பாறை மலை பகுதி உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் காலை முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.



வால்பாறை நகர் பகுதியில் உள்ள திரு இருதய ஆலயம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ள நூற்று கணக்காணவர்களின் கல்லறைகள் அனைத்தும் வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து மெலுகுவர்த்தி ஏந்தி பிரத்தனைகள் நடைபெற்றது, வால்பாறை திரு இருதய ஆலயம் பங்கு தந்தை அருட் திரு ஜெகன் ஆன்டனி தலைமையில் கல்லறை தோட்டத்தில் உள்ள பீடத்தில் மரித்தோர்களுக்கான விசேஷ திருப்பலி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.



இதை போல வால்பாறை புனித லூக்கா ஆலயம் பங்கு தந்தை தலைமையில் விசேஷ பிரதனைகள் நடத்தப்பட்டது.



மேலும் வால்பாறை சி எஸ் ஐ ஆலயத்திலும், முடிஸ் புனித அந்தோனியார் ஆலயத்திலும் ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயத்திலும், சோலையார் அணைப்பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் கல்லறை திரு நாள் அனுசரிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...