தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் - எம்.எல்.ஏக்களிடம் மனு வழங்க முடிவு

அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 7-ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டமாக வரும் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.


கோவை: மின் கட்டண உயர்வு குறைக்க வலியுறுத்தி 234 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளிக்க கோவை தொழில் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்

கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ் மற்றும் ஜெயபால் கூறுகையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க இது வரை 6 கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நிலைகட்டணம் மற்றும் பீக்ஹவர் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

அதுமட்டுமில்லாமல் 3B-யில் இருந்து 3A-க்கு மாற்றிய அரசாணையை அமல்படுத்தாமல் காலதாமதம் ஏற்படுத்து வருவதாக தமிழக அரசின் மீது குற்றம் சாட்டினர்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.எங்களின் தொழில் 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எங்களின் வலியை அரசு புரிந்து கொண்டு செவி சாய்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 7-ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டமாக வரும் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாக இதை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

கோவையை பொறுத்தவரை 10 சட்டமன்ற உறுப்பினர்,2 நாடாளுமன்ற உறுப்பினர்களை கோ இண்டியா வளாகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கின்றோம்.

இதில் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அன்றே முடிவு செய்யப்படும் எனவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...