திருக்காட்டுப்பள்ளியில் ஒருவர் கொலை - குற்றவாளிகள் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேரும் கோவை புறநகர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரூபா முன்பாக நேரில் ஆஜராகி உள்ளனர்.


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள திருச்சென்னம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் வி.எஸ்.எல்.குமார் என்கிற முருகையன். இவர் மீது திருக்காட்டுப் பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் குமாருக்கும் அவரது முன்னாள் நண்பர் பவுசு செந்திலுக்கும் இடையே போட்டி நிலவி வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குமார் தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை 3 பைக்குகள், ஒரு காருடன் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழ விழுந்த குமாரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் தலை துண்டான நிலையில், குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரின் மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில், பவுசு செந்தில், சாமி ரவி, மோகன், பிரசாந்த்.



கடமுடா மணி, குட்டி என்கிற பிரவின் ஆகிய 6 பேர் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகள் 6 பேரையும் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இன்று அந்த ஆறு பேரும் கோவை புறநகர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரூபா முன்பாக நேரில் ஆஜராகி உள்ளனர்.



இந்நிலையில் 6 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...