திருப்பூர் மாவட்டத்தில் ஓராண்டில் 111 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - 13 பேர் மீது வழக்குப்பதிவு

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது பெண்களுக்கு எதிரான மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த இலவச தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஓராண்டு மட்டும் 111 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.



திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகளின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து

ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் மூத்த பத்திரிகையாளர் மணி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் போது ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள் நடைபெறும் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் குழந்தை குற்றங்களை தடுக்க வேண்டிய நிகழ்வுகள் குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்து ஓர் ஆண்டில் மட்டும் 111 குழந்தை திருமணங்கள் குற்றம் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இதில் 90-க்கும் மேற்பட்ட திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் ஆறு வழக்குகளுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஊடகங்கள் இது குறித்த செய்திகளை வெளியிடும்போது பெண்களுக்கு எதிரான மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த இலவச தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...