உடுமலையில் இலவச பயிற்சி வகுப்புகள் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உடுமலையில் பார்க் பள்ளிக்கூடத்தில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலையில் ராஜேந்திர ரோடு நகராட்சி பூங்கா எதிரில் உள்ள பார்க் பள்ளிக்கூடத்தில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் 1 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இந்த இலவச பயிற்சி வகுப்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...