கோவையில் சூடான் மாணவர்களுக்கிடையே மோதல் - கத்திக்குத்து குறித்து போலீஸ் விசாரணை

மோதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் சூலூர் காவல் நிலையத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் ஒரே அறையில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த சூடான் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்கத்தியால் குத்தியத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

சூலூரில் ஒரே அறையில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்த சூடான் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தியத்தில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதி சக மாணவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் சூடான் நாட்டை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சூடான் நாட்டைச் சேர்ந்த சுராக மற்றும் காலித் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அறையில் தங்கி இருந்த காலிட் மற்றும் சுரேகா ஆகிய இருவருக்கும் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடித்து வந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது இந்த மோதலில் காலித் அறையில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து சுரேகாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து உள்ளார் சுரேகா, பின்னர் அறையில் தங்கி இருந்த சக நண்பர்கள் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுரேகாவை மீட்டு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மோதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் காலத்தையும் கைது செய்து சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...