உடுமலையில் கல்லறை திருநாள் - சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்பு

கல்லறை நாளையொட்டி முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: உடுமலையில் கல்லறை திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆத்மாக்களின் திருநாள் என்று அழைக்கப்படும் கல்லறை திருநாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட 3- வது நாள் உயிர்த்து எழுந்தார்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் ஆத்மா சாந்தி பெற அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கு அதிகாலையில் சென்று சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வழிபடுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது.



அந்த வகையில் உடுமலை கபூர் கான் வீதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடுமலை தென்னிந்திய திருச்சபைகளின் சார்பில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர். அப்போது இமானுவேல் ஆலயத்தைச் சேர்ந்த ஆயர் அம்மா மேரி செல்வராணி, லூத்தர் ஆயர், கிறிஸ்துநாதர் ஆலயத்தைச் சேர்ந்த ஆயர் செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு ஜெபம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...