தாராபுத்தில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அஞ்சலி

தாராபுரம் கத்தோலிக்க திருச்சபை கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பங்குத்தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. இதில்,100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு வந்து அவர்களின் முன்னோர்களை வழிபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.



தாராபுரம் கத்தோலிக்க திருச்சபை கல்லறைத் தோட்டத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத்தந்தை கனகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துவ மத குருமார்கள் கல்லறைகளுக்கு புனித நீர் தெளித்தனர்.



அங்கு கூடி இருந்த கிறிஸ்தவ பொதுமக்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களை நினைவு கூரும் வகையில் மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனால் தங்களின் முன்னோர்களின் ஆசிர்வாதம் எப்போது தங்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை. இந்தக் கல்லறை திருநாளையொட்டி 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு வந்து அவர்களின் முன்னோர்களை வழிபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...