பல்லடத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் சதாசிவம் என்பவர் தனது காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, மீண்டும் எடுக்க முயன்றபோது திடீரென கார் பற்றி எரியத்தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சதாசிவம் என்பவர் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மற்றொரு கார் சதாசிவத்தின் காரை முந்தி செல்ல முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட சதாசிவம் சாலையோரமாக காரை நிறுத்தி உள்ளார்.



மீண்டும் காரை இயக்க முயன்ற போது திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது. காரின் முன் பக்கத்தில் தீ எரிவதை சுதாரித்துக் கொண்ட சதாசிவம் காரை விட்டு வெளியேறினார்.

சாலையோரமாக திடீரென கார் பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பரபரப்பான திருப்பூர் சாலையில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...