யாரையும் நம்பி தனிப்பட்ட புகைப்படம், வீடியோக்களை அனுப்பாதீர்கள் - கோவையில் பெண்களுக்கு அறிவுறுத்திய முன்னாள் டிஜிபி..!

கோவை துடியலூர் பகுதியில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவிகளிடையே கலந்துரையாடினார்.


கோவை: நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தங்களது விவரங்களை, புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்வதால் பல்வேறு சைபர் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது.

இவற்றை தடுக்கும் பொருட்டு மாநில மற்றும் அந்தந்த மாவட்ட சைபர் கிரைம் பிரிவுகள் மூலம் பள்ளி, கல்லூரிகளில் மற்றும் இணையம் மூலம் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட புகைப்படங்களை வீடியோக்களை செல்போன்கள் மூலம் பகிர்வதால், பெண்கள் எந்த மாதிரியான இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பது குறித்து கோவையில் செவிலியர் மாணவிகளிடையே தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துரையாடினார்.



கோவை துடியலூர் அருகே உள்ள கங்கா செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டார். அப்போது மாணவிகளிடையே பேசிய அவர், தன் வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளையும், தான் கோவையில் ஆணையராக பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

மேலும், பெண்கள் அவர்களுடைய தனிப்பட்ட விவரங்களை, புகைப்படங்களை வீடியோக்களை பொதுவெளியில் மற்றும் செல்போன்கள் மூலம், அறிமுகம் இல்லாத நபர்களுடன் பகிர்வதால் எந்த மாதிரியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை விரிவாக மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.



தொடர்ந்து, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஒரு மாணவி, பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சைலேந்திர பாபு, பெண்கள் செல்போன்களை பயன்படுத்தும் போது யாரையும் நம்பி தங்களது தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப கூடாது. அது பாதுகாப்பானது அல்ல. அதை வைத்து உங்களை பிளாக் மெயில் செய்வார்கள் என்று எச்சரித்தார்.



தொடர்ந்து, மாணவிகளிடையே கலந்துரையாடிய முன்னாள் டிஜிபி, அவர் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கி மாணவிகளை வாழ்த்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...