வீரிய ஒட்டு, பாசுமதி அல்லாத சன்ன ரக நெல் சாகுபடி - தாராபுரத்தில் வேளாண் பல்கலை நிபுணர்கள் ஆய்வு

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வீரிய ஓட்டு ரகமான டி.என்.டிஆர்.எச் 55 மற்றும் பாசுமதி அல்லாத சன்னரக நெல் சி.பிஎம் 14142 ஆராய்ச்சி செய்யப்பட்டு பரிசோதனை அளவில் விவசாயிகளுக்கு வழங்கி சாகுபடி செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வீரிய ஒட்டு ரக நெல், பாஸ்மதி அல்லாத சன்ன ரக நெல் பரிசோதனை அடிப்படையில் சாகுபடிக்கு வழங்கப்பட்டது. கோவை வேளாண் பல்கலைக்கழக நிபுணர்கள் வயலில் ஆய்வை மேற்கொண்டனர். இந்திய அளவில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ஏற்றுமதி ரக பாசுமதி அரிசி சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் உலக அளவில் வீரிய ஒட்டு நெல் ரகங்கள் சீனாவில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வீரிய ஓட்டு ரகமான டி.என்.டிஆர்.எச் 55 மற்றும் பாசுமதி அல்லாத சன்னரக நெல் சி.பிஎம் 14142 ஆராய்ச்சி செய்யப்பட்டு பரிசோதனை அளவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கூடலூர், சத்தியமங்கலம் தாராபுரம் பகுதியில் கோவை வேளாண் பல்கலைக்கழக சார்பில் நெல்ரகங்கள் சாகுபடிக்கு வழங்கப்பட்டது. தாராபுரம் தளவாய்பட்டினம் முன்னோடி விவசாயி சந்தானகிருஷ்ணன் வயலில் வீரிய ஓட்டு ரகமான 55 மற்றும் சன்னரகமான 142 இரு ரகங்களும் ஒரு, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.



இந்த நெற்கதிர்களை கோவை வேளாண் பல்கலைக்கழக நெல் பிரிவு துறை தலைவர் டாக்டர் மனோன்மணி, ப்ரொபசர் புஷ்பம் ஆகியோர் முன்னோடி விவசாயிகளுடன் ஆய்வு செய்தனர் விவசாயிகளிடையே டாக்டர் மனோன்மணி 120-நாள் பயிரான இந்த இருநெற்பயிர் சாகுபடி செய்வதால் நல்ல விளைச்சல் கிடைப்பதுடன் நோய் தாக்குதலில் இருந்து வறட்சியான காலத்திலும் நெற்பயிர் பாதுகாக்கப்படுகிறது. மேலும் சன்னரக பாஸ்மதி அல்லாத நெல் நல்ல அரவை திறனை 70 சதவீகிதம் அளிப்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதன் முலம் விவசாயிகள் அதிக மகசூலை பெறுவதுடன் லாபமும் பெறலாம்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பரிசோதனை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



விவசாயிகளுக்கு சோதனை அடிப்படையில் வழங்கிய இருரக நெல் தன்மைகளை வேளாண்பல்கலைகழகம் நன்கு ஆராய்ந்து முடிவு செய்யும். அதற்குப் பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் நெல் விதைகளை விரைவில் வழங்கும் இத்தகைய ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல மகசூல் பெற்று லாபம் பெறுவதுடன் ஏற்றுமதி செய்யவும் இயலும். இவ்வாறு மனோன்மணி கூறினார்.

தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தினர் விடை அளித்து விவசாயிகளின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார்கள். தாராபுரம் வேளாண் உதவி இயக்குனர் லீலாவதி, முன்னோடி விவசாயிகள் பார்த்தசாரதி, டாக்டர் அஜய் வெங்கட்ராமன், ராமராஜ் அருணாசலம், நாட்டு துறை, இளங்கோ உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...