ராசிபாளையத்தில் கலையரங்கம் திறப்பு விழா - எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி பங்கேற்பு

பொதுமக்கள் விழா நடத்த, கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்தலாம் என்றும், ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தெரிவித்தார்.


கோவை: சூலூர் அருகே ராசிபாளையத்தில் பொதுமக்கள் பயன்பாடுக்காக கலையரங்கத்தை சூலூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7,10,000/- மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.



இதன் திறப்புவிழாவிற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்.

சூலூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.குமரவேல், ராசிபாளையம் ஊராட்சி தலைவர் கவிதா ஆகியோர் வரவேற்றனர்.



சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி பேசும்போது, பொதுமக்கள் விழா நடத்த , கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, சூலூர் கார்த்தி, கூட்டுறவு சங்கதலைவர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...