ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்லடத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம்" என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி நால்ரோடு வழியாக மங்கலம் சாலை வழியாக அரசு பள்ளி வரை நடைபெற்றது.



இந்நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்ற கோஷத்தோடு பேரணியாக சென்றனர்.



இந்நிகழ்வில் பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சசிலேகா, போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...