கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு - 14 வது நபர் கைது

கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து நசீருக்கு முன்கூட்டியே தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 வது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் வழக்கில் ஜமேசா முபின் என்ற ஏ1 குற்றவாளி உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 14 வது நபராக போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் (27) என்பவரை நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பெயின்டராக வேலை செய்து வந்துள்ளார். கார் குண்டுவெடிப்பு குறித்து நசீருக்கு முன்கூட்டியே தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நசீரை நேற்று கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அவரை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...