தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறைத் தலைவர் ப.சுப்பிரமணியன் வரவேற்றார்.

கல்லூரி மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர். ஊழலை ஒழிப்பதில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ரா.சிவசாமி சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியர் ரா.சிவசாமி கூறியதாவது, சிறப்புரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் கோ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...