கோயம்புத்தூரில் வடகிழக்கு பருவமழை - கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்ணை அறிவித்த மாநகராட்சி

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமான புகார்களுக்கு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கு ஏற்படும் மழைநீர் தேக்கங்கள் இடையூறுகள், கழிவுநீர் அகற்றுதல், மின்விளக்கு பழுதுகள், சாலைகள் பாதிப்பு, மரங்கள் உடைந்து விழுவது ஆகிய புகார்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் பருவமழைக்கான அவசர கால் கட்டுப்பாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறை மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவே, பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-4709525, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2577216, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2551700, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2252705, மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை வாட்ஸப் கைபேசி எண்-8190000200. பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்கள்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...