உடுமலையில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி - கோபி அணி வெற்றி

சென்னை அணியும் கோபிசெட்டிபாளையம் அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் 2:1 என்ற புள்ளி கணக்கில் கோபி அணி வெற்றி வெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை ஜேபிஆர் பல்கலைகழகம் அணி கல்லூரி அணியும், தமிழ்நாடு தபால் துறை அணியும் மோதியதில் தமிழ்நாடு தபால் துறை அணி 2:2 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ராகல்பாவி பிரிவு அருகே உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரேணுகாதேவி லெப்டினேட் சுபாஷ் அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் கல்லூரி மகளிருக்கான கைப்பந்து போட்டி நேற்று இரவு முதல் மூன்று நாட்களுக்கு 14 போட்டிகளாக நடைபெறுகிறது.



இதில் சென்னை, மதுரை, சேலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த அணிகள் கலந்து கொள்கிறது. முதல் போட்டியை தொடங்கியது. போட்டியை அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ்.ஆர் செல்வராஜ், உடுமலை வியாபாரிகள் சங்கத் தலைவர் பால நாகமாணிக்கம், செயலாளர் குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அதைத் தொடர்ந்து சென்னை அணியும் கோபிசெட்டிபாளையம் அணியும் மோதியதில் பரபரப்பான ஆட்டத்தில் 2:1 என்ற புள்ளி கணக்கில் கோபி அணி வெற்றி வெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை ஜேபிஆர் பல்கலைகழகம் அணி கல்லூரி அணியும், தமிழ்நாடு தபால் துறை அணியும் மோதியதில் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு தபால் துறை அணி 2:2 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்றது.

அப்போது போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளை சக வீராங்கனைகளும், பொதுமக்களும் உற்சாகப்படுத்தினார்கள். அறக்கட்டளை நிர்வாகிகள் பாலமுருகன், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சத்யம் பாபு, அமராவதி ராணுவ பயிற்சி பள்ளி ஆசிரியர் இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...