நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் அபார வெற்றி பெறும் - சுதாகர் ரெட்டி பேட்டி

தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு அவர்களின் கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும், மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில அளவிலான பயிற்சி முகாம், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்றது.



முகாமில் தமிழ்நாடு இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளிடம் பேசும் பொழுது, வரும் மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆகவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பேசினார்.



மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் உட்பட மாநில மண்டல மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...