உடுமலை உழவர் சந்தையில் மூன்று கோடிக்கு மேல் காய்கறிகள் விற்பனை

கடந்த அக்டோபர் மாதம் 7 லட்சத்து 28 ஆயிரத்து 225 கிலோ காய்கறிகளும், 90 ஆயிரத்து 920 கிலோ பழ வகைகளும் ஆக மொத்தம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 145 கிலோ வரத்து உடுமலை சந்தைக்கு வந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது. சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நாள்தோறும் புத்தம் புதியதாக காய்கறிகள் கிடைப்பதால் உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை சீரான முறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 7 லட்சத்து 28 ஆயிரத்து 225 கிலோ காய்கறிகளும், 90 ஆயிரத்து 920 கிலோ பழ வகைகளும் ஆக மொத்தம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 145 கிலோ வரத்து வந்துள்ளது.

அதன்படி ரூபாய் 3 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளது. சந்தைக்கு 2 ஆயிரத்து 274 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்துள்ளனர். அதை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 3 பொதுமக்கள் வாங்கிச் சென்று உள்ளனர்.

காய்கறிகள் பழங்கள் தரமாக கிடைப்பதால் உழவர் சந்தைக்கு வருகை தருகின்ற பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு ஏற்றார் போல் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து கடைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...