உடுமலையில் அரசுப் பள்ளியில் 3வது செட் விலையில்லா சீருடைகள் வழங்கல்

மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-24 ம் கல்வி ஆண்டுக்கான 3-வது செட் விலையில்லா சீருடைகள் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வழங்கப்பட்டது.



பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி வழங்கினார். அதைத் தொடர்ந்து பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...