பல்லடம் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் - முன்னாள் எம்பி அர்ஜுனன் பங்கேற்பு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் நிர்வாகிகளுஃகு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவர்களின் தலைமையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் எம் எஸ் எம் ஆனந்தன் எம் எல் ஏ அவர்களின் முன்னிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு நேரில் பூத் கமிட்டி நோட்டுகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.



இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மிருதுளா நடராஜன், இளைஞரணி மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...