அவினாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் சங்கிலி பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

அவினாசியில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் பத்தரை சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலிகளை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றதில் பெண், அவரது மகன் கீழே விழுந்து காயமடைந்தனர்.


திருப்பூர்: அவினாசியில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, மடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவிநாசி - திருப்பூர் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி யுவராணி, மகன் கனிஷ்க் ஆகியோருடன் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டு, திரும்ப திருப்பூர்- அவிநாசி சாலையில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் அவர்களை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் யுவராணி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை மற்றும் மூன்று சவரன் தங்கச் செயின்களை கழுத்திலிருந்து அறுத்து கொண்டு சென்றனர்.

இதனால் நிலைதடுமாறிய யுவராணி மற்றும் அவரது மகன் கனிஷ்க் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சுதாரித்த கந்தசாமி மர்மநபர்களை சிறிது தூரம் துரத்திக் கொண்டு சென்றார். ஆனால் அவர்கள் தப்பி விட்டனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து அவிநாசி காவல் நிலையத்தில் கந்தசாமி நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த அவிநாசி போலீசார் அங்கு பதிவு ஆகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...