மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - கோவையில் மத்திய அமைச்சர் எல் முருகன் உறுதி

மாலத்தீவு விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் என்ற முறையில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல் முருகன் உறுதியளித்துள்ளார்.

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 'Gastro Update - 2023' எனும் மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் துவக்க நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு கருத்தரங்கினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மீனவர்களை மத்திய இணை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மீனவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டதோடு, தற்போது மீனவர்களுக்கு 2 கோடி 27 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் மற்றும் ஊர் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் கேட்டுக்கொண்டனர்.

மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மீனவர்களிடம் உறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...