காடுகுட்டை பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் - அமைச்சர் முத்துசாமி துவக்கி வைப்பு

கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையம் மூலம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மோட்டார் இயக்கப்பட்டால் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும் எனவும், காடுகுட்டை பகுதியில் 7.36 கோடி லிட்டர் நீரை தேக்க முடியும் எனவும், இதனால் 15 நாட்களில் குட்டை நிரம்பக் கூடும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் காடுகுட்டை பகுதிக்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அனுப்பும் வகையில் 5.16 கொடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மற்றும் நீரூந்து நிலையத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கடந்த 4ம் தேதி திறந்து வைத்தார்.



கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ஒண்டிப்புதூர் சேகரிப்பு நிலையம் அருகே நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து நீர்ந்து நிலையம் கட்டப்பட்டு 125 HC திறனுள்ள மோட்டர் பொருத்தப்பட்ட நிலையில், செட்டிபாளையம் பகுதியில் உள்ள காடு குட்டை என்ற பகுதி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மின் இணைப்புகளில் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் சுத்திகரித்த நீரை பம் செய்து குட்டைகளில் நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு பலமுறை விவசாயிகள் கொண்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மூலம் 40 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு மின் இணைப்பு பெறப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இதனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் காடு குட்டைக்கு வந்தடைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மோட்டார் இயக்கப்பட்டால் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும் எனவும், பாடுகூட்டை பகுதியில் 7.36 கோடி லிட்டர் நீரை தேக்க முடியும் எனவும், இதனால் 15 நாட்களில் குட்டை நிரம்பக் கூடும் என தகவல் தெரிவித்த நீர்வளத்துறை அதிகாரிகள், இங்கிருந்து செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள 14 குட்டைகள் பீடம் பள்ளி கிராமத்தில் உள்ள ஒன்பது குட்டைகள் பட்டணம் பகுதியில் உள்ள 4 குட்டைகள் இனமொத்தம் 27 குட்டைகள் நிரம்ப கூடும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் சுமார் 5000 ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறும் எனவும் நீர்மட்டம் உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...