கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும், மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும், மழைக்கால நிவாரண நிதியாக 8000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மண்பாண்ட தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும், மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும், மழைக்கால நிவாரண நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கு ஆணை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



இந்த மனு இச்சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய ராஜகோபால், தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும் மண் அடுப்பையும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். மேலும் மழைக்கால நிவாரண நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ஐந்தாயிரம் ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் இதன் மூலம் பழங்கால தொழில் ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



மனு அளிக்க வந்த அவர்கள் மண்பானையையும் மண் அடுப்பையும் தலையில் ஏந்தியவாறு அவர்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...