தாராபுரத்தில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் - நடிகர் ரஞ்சித்துக்கு வாழ்த்து

மோரியா மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களை கண்டித்து வருகின்ற ஜனவரி மாதம் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை இணைத்து மாநாடு நடைபெற உள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார், கோட்ட செயலாளர்கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் சதீஷ், மாவட்டதுணை தலைவர்கள் தவமணி பாலு, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது, ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் வருகின்ற 9-ந் தேதி நடத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

சென்னிமலை அருகே உள்ள கந்தகுடி என்ற கிராமத்தில் உள்ள மலையை மோரியா மலை என பெயர் மாற்றம் செய்து வைத்துள்ளனர். அவ்வாறு மலையின் பெயரை மாற்றக்கூடாது என அந்த கிராம மக்கள் தற்போது போராடி வருகின்றனர்.

மோரியா மலை என்று பெயர் மாற்றம் செய்பவர்களை கண்டித்து வருகின்ற ஜனவரி மாதம் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்கள் சேர்ந்து மாநாடு நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக்களில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுகின்றனர்.

இதற்கு திரைப்பட நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்திருந்தார். அதில் வள்ளி கும்மியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை வளத்தெடுக்கலாம் என தெரிவித்திருந்தார். கருத்து கூறிய திரைப்பட நடிகர் ரஞ்சித்துக்கு இந்து முன்னணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...