வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா - தாராபுரத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர்த்திட்ட அலுவலகம் சார்பில் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர்த்திட்ட அலுவலகம் சார்பில் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் சாமிநாதன் கயல்விழி ஆகியோர் வழங்கினர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-



தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம், கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் சுமார் -120 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலை தேடுநர்கள் இங்கே வருகை தந்துள்ளார்கள் திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நான்காவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நூறு நிகழ்ச்சிகளை நடத்த அரசு திட்டமிட்டடது.



தொழிலாளர் நலத்துறையின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் மூலம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையிலே இது 67-வது நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதி மணி, திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குநர் (மகளிர்த்திட்டம்) வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமில் சைகை மொழியை புரிந்து கொள்ளும் வகையில் சைகை நிபுணரை வைத்து உரையாடல்களை காது கேளா தோர் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...