நெருங்கும் தீபாவளி பண்டிகை - கோவை மற்றும் திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 20 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம்

புதிய ஜவுளி உற்பத்தி கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளால் தொழிலின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கோவை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று முதல் 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல தமிழகத்திலும் புதிய ஜவுளி உற்பத்தி கொள்கையை கொண்டு வர வேண்டும் எனவும், மின்சார மானியம் ரத்து உள்ளிட்ட பிரச்சினைகளால் தொழில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களாக தொழில் நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தமிழக அரசு இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என கோரி திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பினர் இன்று முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போர் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஜவுளி தொழில் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.

பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளில் மிகவும் மலிவான துணிகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜவுளி கொள்கை, ஜவுளி தொழிலுக்கு என்ற தனிப்பட்ட மின்சாரம் மானியம் போன்ற காரணங்களால் ஜவுளி உற்பத்தி செலவு நமது மாநிலத்தை விட குறைவான காரணத்தினால் நம்மால் போட்டி போட இயலாத சூழல் உருவாகி உள்ளது.



ரோட்டோ காட்டன் என்கின்ற பாலிஸ்டர் துணிப்பைகளால் நமது இயற்கை பருத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட துணிப்பைகளின் தேவை முற்றிலுமாக சரிந்து விட்டது. அரசு மீண்டும் இதை கையில் எடுக்க வேண்டும். மின்சார மானியம் மீண்டும் வழங்க கோரியும் நாளை முதல் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜவுளி தொழில் சார்ந்த ஆட்டோ லூப், சூல்ஜர், ஏர்ஜெட் பவர்லூம் போன்ற அனைத்து ஜவுளி தொழில்களின் உற்பத்தியும் இன்று முதல் நிறுத்தப்பட்டதால் சுமார் 300-க்கும் மேற்பட்ட நூல் மில்கள் மூடப்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் என்ற கணக்கில் 20 நாட்களுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்படும் எனவும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதமும் கேள்விக்குறியாகும் நிலைஉருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மில்களில் தென் மாவட்டங்களில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை நேரத்தில் 20 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகை செலவுக்கு என்ன செய்வது என தெரியாமல் திணறி வருவதாகவும் இந்த வருடம் தீபாவளி கொண்டாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் ஜவுளி உற்பத்தியாளர் வேதனையோடு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...