நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு

கிணத்துக்கடவு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை :கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக்கடைகளில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் நியாய விலைக் கடையில் முறைகேடு கழிவு நீர் கால்வாய் அமைப்பது அரசு பேருந்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சியின் செயலாளர் அசோக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடை பேரூராட்சிக்குட்பட்ட சின்ன ஐயாகவுண்டன் புதூர், நியாய விலை கடையில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாகவும் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகவும் ரேஷன் பொருட்களை வெளி நபர்களுக்கு விற்பனை செய்வதாக கூறினா்.

எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட கேஜி சாவடி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனவும், உக்கடம் கரும்புக்கடை குறிச்சி சுந்தராபுரம் கஸ்தூரி கார்டன் வள்ளல் நகர் செந்தமிழ் நகர் கிருஷ்ணா கல்லூரி மைல்கல் பகுதிகளில் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்தனர். எனவே இந்த வழித்தடங்களில் அரசு மினி பேருந்து அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...