அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி - எனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் சாமிநாதன் பல்லடத்தில் பேட்டி

செயல்படாமல் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தை உழவர் சந்தையாகவோ, ஜவுளி சந்தையாகவோ மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர் :அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் திருப்பூரில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கோடங்கிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரணம்பேட்டையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் எட்டு வருடங்கள் ஆகியும் எந்த பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் செல்லாததால் பயன்பாடு இன்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.



இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார், ஊராட்சி தலைவர், ஆகியோர்செயல்படாமல் பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர்.



செயல்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை உழவர் சந்தையாகவோ, ஜவுளி சந்தையாகவோ மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில்,



செயல்படாமல் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் எனக்கு தெரியாது எனவும் ஊடகங்களில் பொய்யான செய்தியை வெளியிடுகிறார்கள் எனவும் தெரிவித்தார். அதே போன்று சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கன்னத்திற்குரியது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த செய்தியும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...