உடுமலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என்பதை மாற்றி தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பணிபுரியும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் உடனே வழங்கக்கோரியும், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என்பதை மாற்றி தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம் உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீஷ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் உட்பட 700-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.



போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் உடுமலை வட்டார வளர்ச்சி துறை அதிகாரி சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...