தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவையில் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு

கோவை மாநகராட்சி 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளவதற்காக மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


கோவை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கோவை மாநகராட்சி 15வது வார்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி, சேலை, இனிப்புகள் மற்றும் ஊக்கப்பரிசுகளை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து வழங்கினார். முன்னதாக பாதாளச் சாக்கடைப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 15 வது வார்டு சுப்பிரமணியம் பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட தூய்மை பணியாளர்கள், தண்ணீர் விநியோகிப்பவர்கள் உள்ளனர்.



அவர்களும் தீபாவளியை கொண்டாடும் விதமாக 15வது மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கும் இனிப்புடன் வேஷ்டி சேலை மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பச்சை முத்து முன்னிலை வகித்தார். இதில் RGPRS வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்னு ராமகிருஷ்ணன், மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300 கோடி மதிப்பில் துடியலூர், கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் ஒரு பகுதியாக 15 வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ள மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து அவர்கள் தலைமையில் பூஜை போடப்பட்டது.

இவ்விழாவில் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜர் மதன், எல்.என்.டி இன்ஜினியர் ராஜராஜன், ஷேக் அப்துல் காதர், நஞ்சுகுட்டி கவுண்டர், செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...