கோவையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்

கோவையில் 427 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.


கோவை: கோவையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வு இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கோவையில் 427 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து, இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

இதனை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்த உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...