இந்தியாவிலேயே முதல்முறையாக கதிர்நாயக்கன்பாளையத்தில் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி

ஐந்து மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், இதற்காக தனியாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் சி.ஆர்.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் தெரிவித்துள்ளார்.


கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் குறைந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தினை சி.ஆர்.பி.எப். தலைவர் மற்றும் இயக்குநர் சுஜய் லால் தோசென் திறந்து வைத்தார்.

கோவை துடியாலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சி.ஆர்.பி.எப். காவலர் முதல் சப் இன்ஸ்பெக்டர் வரை வீரர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது இந்த வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் குறைந்த செலவில் நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தினை சி.ஆர்.பி.எப் கல்லூரி முதல்வர் அஜய் பரதன், சென்னை ரேஞ்ச் டி.ஐ.ஜி.அருள்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உருவாக்கியுள்ளனர்.



இதனை சி.ஆ.பி.எப் தலைவர் மற்றும் இயக்குனர் சுஜய் லால் தோசன் துவக்கி வைத்தார்.



அப்போது ஆண் மற்றும் பெண் வீரர்கள் குறி பார்த்து துப்பக்கியால் சுட்டு சாகசம் செய்தனர்.



தொடர்ந்து துப்பாக்கு சுடும் தளத்தை பார்வையிட்டு வீரர்களுக்கு இயக்குநர் வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.பி.ஆப். இயக்குநர் சுஜய் லால் தோசன் இந்தியாவில் உள்ள பயிற்சி கல்லூரிகளில் நவீன கட்டமைப்பு இங்கு தான் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கும் எடுத்து சென்று அமைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்துறை அம்சங்களைக் கொண்ட இந்த துப்பாக்கிச் சுடும் தளம் இப்போது இருக்கும் பயிற்சியாளர்களின் திறமையான துப்பாக்கிச் சுடும் நடைமுறைகளுக்கும். அதன் பணியாளர்களின் துப்பாக்கி சுடும் திறன்களை கூர்மைப்படுத்துவதற்கும் பயன்படும் என்றார்.

மேலும் நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து எங்கள் சி.ஆர்.பி.எப். வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக தனியாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் தற்ப்போது தீவிரவாதம் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலம் தீவிரவாதிகளின் முகாமை கண்காணித்து அழிக்கப்டுகிறது என்று கூறினார். இவ்விழாவில் CRPF மற்றும் மாநில காவல்துறை / மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...