திருப்பூர் அரசுப்பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் - மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அரசு பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.



ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில் ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையிலான எளிய மருந்துகளை மாணவிகளுக்கு மருத்துவர்கள் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...