எரிசினம்பட்டியில் சம்பளம் கேட்டு நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில், கடந்த மூன்று மாதங்களாக வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா எரிசினம்பட்டி பகுதியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூறு நாள் வேலை திட்டத்தில் கடந்த மூன்று மாத காலம் வேலை செய்த சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டம் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கே.எம் இசாக் தாலுகா செயலாளர் வி செளந்தரராஜன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகி வி பி பழனிச்சாமி, எம் ரமேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...