கோவையில் தடுப்பு, அறிவிப்பு பலகை அமைக்காமல் மழைநீர் வடிகால் பணி தொடர்ந்த ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து உத்திரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.31 க்குட்பட்ட ராஜிவ் காந்தி சாலை பகுதியில் மூலதன மானிய நிதி திட்டம் 2022-23, 1134 மீட்டர் தொலைவிற்கு மூடுபலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக 07.11.2023 (இன்று) பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆணையாளர் அவர்கள் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்திரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...