அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி - ஒரே நாளில் மூன்று அடி உயர்வு

அமராவதி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


திருப்பூர்: நீர் பிடிப்பு பகுதியி்ல் பெய்யும் மழையால் திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் ஒரே நாளில் மூன்று அடி மட்டம் நீர் உயர்ந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர் காந்தலூர் தூவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகின்றது.



இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி கிடு கிடுவென உயர்ந்துள்ளது தற்சமயம் மொத்த 90 அடியில் 64.70 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 2462 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது அமராவதி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...