புதுப்பொலிவுடன் நேரு மைதானம் - கோவையில் காணொலி மூலம் போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர்

கோவையில் புது பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள நேரு ஸ்டேடியத்தில் 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன் போட்டி துவங்கியது.


கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.6.55 கோடி மதிப்பில் சிந்தடிக் ஓடுதளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

கோவை வஉசி அருகே நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400மீ தூரத்திற்கு சிந்தடிக் ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளம் கடந்த 2008-ல் அமைக்கப்பட்டது.

இந்த ஓடுதளம் தற்போது பழுதடைந்து உள்ளது. இந்நிலையில், ஓடுதளம் சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.

தவிர விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடைபெற்றது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதையடுத்து, சிந்தடிக் பாதை அமைக்கும் பணி, நேரு விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் நடந்து வந்தது. இதில், தற்போது சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன் போட்டி துவங்கியது போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அத்லெடிக் அசோசியேஷன் தலைவர் தேவாரம் துணைத் தலைவர் மோகன் தாஸ், செயலாளர் சி.லதா ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் பத்தாம் தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் 38வது நேஷனல் ஜூனியர் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...