கொங்கூர் கோவிலுக்கு தேர்வான அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் சாமிநாதனிடம் வாழ்த்து

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி, சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்குர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் உக்கிர காளியம்மன் ஆகிய இரண்டு கோவில்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், செயல் அலுவலர் சுந்தர் வடிவேல், ஆய்வாளர் முருகன் மற்றும் வெண்டுவ குல பங்காளிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான அனைவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவரும் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான எஸ்வி செந்தில்குமார், மூலனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, தாராபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவசாமி மற்றும் பொன் ராஜா துறை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...