தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்டிஓ விடம் மனு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் ஆர்டிஓ விடம் விசிகவினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில், நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில் கூறியிருப்பதாவது தாராபுரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றது. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருள்கள் விற்பனையை தடுக்கவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும், போலீசார் ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாநில செயலாளர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க முத்தமிழ் வேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஆற்றல் அரசு, நகர துணை செயலாளர்கள் உதயகுமார், முருகவேல் உள்ளிட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...