குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் - விவசாயிகள் பங்கேற்பு

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடத்தை அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு குண்டடம் வட்டார வேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் குண்டடம் வட்டார கால்நடை உதவி மருத்துவர் வனிதா மற்றும் சின்ன மோலார்பட்டி உதவி மருத்துவர் பிரகாசம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மை குழுக்கான மூன்று வளர்ப்பு கிடாரிகளுக்காக விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...