கோவையில் தெருவிளக்குகளை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் வந்துள்ளது. இதனையடுத்து, ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி - மேற்கு மண்டலம் வார்டு எண் 38 -க்குட்பட்ட குகன் கார்டன் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 5 நாட்கள் எரிவதாக அப்பகுதி பொதுமக்களிடமியிருந்து Whatsapp வாயிலாக (06.11.2023)அன்று புகார் பெறபட்டுள்ளது.

மேலும் வார்டு எண் 40 -க்குட்பட்ட அண்ணா நகர் 5வது வீதிப் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் செய்தி (06.11.2023) அன்று வந்துள்ளது.

ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்க ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...