தாராபுரம் அரசுக் கலைக்கல்லூரியில் ஓவியப் போட்டிகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

100 சதவீதம் ஓட்டுப்பதிவை குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர். இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா முதலிடம் பிடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு போஸ்டர் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது.

அந்த வகையில் வரும் 2024 ஜனவரி ஒன்றாம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் கறுக்க முறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 100% ஓட்டுப்பதிவு சிதறிக்கும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளில் 25 கல்லூரிகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது அந்த வகையில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த அக்டோபர் மாதம் மாணவ மாணவிகள் 100% ஓட்டுப்பதிவை குறித்தும் வகையில் போட்டி நடைபெற்றது இந்த மாணவ மாணவிகள் விதவிதமான போஸ்டர் ஓவியங்களை தீட்டினர்.

போட்டியில் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கோபிகா செல்வி முதல் இடமும் இளம் அறிவியல் வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் குடியரசு இரண்டாம் இடமும் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி குழலி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 550 இரண்டாம் பரிசாக 300 3ஆம் பரிசாக 100-ம் வழங்கப்பட்டது தாராபுரம் தேர்தல் தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் கல்லூரி முதல்வர் பத்மாவதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...