நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையில் காற்றாலை மின்கம்பங்கள் - தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லதங்காள் அணை நீர்வழிப் பாதையில் தனியார் காற்றாலை சார்பில் மின்கம்பங்கள் அமைப்பு தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் நல்லதங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழை நீர் அதிக அளவில் வரும்போது நீர் வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்கம்பங்கள் மழை நீரில் அடித்துச் சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் நீர்வழி பாதையில் உள்ள கருவேல முட்களை வெட்டி நீர்வழிப் பாதையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர் மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்தில் கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...